தேவதை
வெண்ணிற ஆடை அணிந்திடுவாள்
பொன்னிற மேனியால் ஜொலித்திடுவாள்
இறக்கை இரண்டைப் பெற்றிருப்பாள்
அழகாய் வானில் பறந்திடுவாள்
நல்லவர் அல்லல் படும்போது
நலமாய் வாழ வழி செய்வாள்
சிறுவர் முகத்தில் சிரிப்பையே
என்றும் அவளே வரவழைப்பாள்
கேட்டதை அள்ளி கொடுத்திடுவாள்
ஆனாலும் நிபந்தனை விதித்திடுவாள்
நன்மை செய்தால் அது நிலைக்கும்
தீமை செய்தால் அதை இழப்பாய்
தீயவையன்றி நன்மை செய்தால்
தினமும் அவளே வந்திடுவாள்
உன் தேவையைப் பூர்த்தி செய்திடுவாள்
கடவுளின் சக்தி தேவதை தான்!
- ச. கிறிஸ்து ஞான வள்ளுவன், வேம்பார்.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.