நல்ல மனிதனாக வாழ்ந்திடு!
உலகில் முதல் மனிதனாக வந்த ஆதம்
முதலில் சுவனத்து மனிதனாக வாழ்ந்து
பின்னர் இப்லீஸின் தூண்டுதலால்
இறைவனுக்கு மாறு செய்து
தீயவராக மாறிவிட
முதல் மனிதனையும் மனுசியையும்
சுவனத்தில் இருந்து
வெளியேற்றிவிட்டான் இறைவன்
தம் பாவங்களை நினைத்து
இறையிடம் மன்னிப்புக் கோரி
நல்ல மனிதர்களாயினர் அன்றோ!
ஆதமின் சந்ததியினரில் நல்லவரும் உண்டு
தீயவரும் உண்டு
அதற்குக் காரணம் என்ன?
ஆதமைக் கெடுத்த சைத்தான்
இன்னும் சாகவில்லை
இறையிடம் சாகா வரம் பெற்று
உலகில் பிறக்கும் நல்ல மனிதர்களை
தீமையின் பக்கம் ஈர்த்து
தீயவர்களாக வழி கெடுத்து வருகின்றான்
அதனால் - மனிதா!ஆதமிடமிருந்து
நல்ல பாடம் கற்று
சைத்தானுடன்போராடி வென்று
உலகம் முடியும் வரை நல்ல மனிதனாய் வாழ்ந்து
சுவனம் புகுந்திட தயாராகிடு!
- கவிஞர் எம். வை. எம். மீஆத், தும்புளுவாவை, இலங்கை.
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.