காசினியை மாற்றிவிடு பெண்ணே!
சூரியனை எழுப்புகின்ற சுறுசுறுப்பு கொண்டு
சுழன்றிடுநீ தேனீக்கள் போன்று - நல்ல
காரியங்கள் செய்வதிலே முன்னிலையில் நின்று
காட்டிவிடு கஷ்டங்களை வென்று
பாரினிலே இல்லாதப் புதுமைதனை கண்டு
பிடிப்பதிலே விஞ்ஞானி என்று - முயற்சித்
தேரேறி தேடல்களில் மூழ்கிவிடு நன்று
தெய்வத்தின் துணையுனக்கு உண்டு.
தூரிகைகள் இல்லாமல் சித்திரங்கள் தீட்டும்
துணிவொன்று கொண்டுவிடு இன்று - எந்தக்
காரிகைக்கும் இல்லாத இலக்கணங்கள் வகுத்து
காசினியை மாற்றிவிடு சென்று.
- மெய்யன் நடராஜ், தோஹா, கத்தார் .
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.