பகுத்தறிவு!
விதியெனும் ஊஞ்சலே கதியென
விளையாடும் மனிதர்
விலங்காய் சிந்தனைக்கு
விளங்காத சாதிமத
விளக்கில் வீழ்ந்து வதைபடும்
விட்டில் பூச்சியாய்
விரிவதுதான் பகுத்தறிவோ...?
விண்ணுக்கும் மண்ணுக்கும்
விவேக புத்தியுடன் பாலம் அமைக்கும்
விபர நுணுக்கத் திறனுடையோர் -சிலர்
வினையாய் நடத்தும் குற்றங்களுக்கு
விதண்டாவாதம் பேசி விதியை
விமர்சிப்பதுதான் பகுத்தறிவோ...?
விளையாட்டும் விமர்சனமும்
வினையாகிப் போகாமல்
விதி சாயங்களை விரட்டும்
விவேக அறிவு முதிர்ச்சியுடன்
விட்டில் பூச்சியாய்
விமர்சனச் சதியில் வீழ்ந்திடாத
விசால மனத் தெளிவே பகுத்தறிவு...!
- நாகினி.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.