புதுத் துறவி
வள்ளுவன் கண்டெடுத்த
மூன்றாம் பாலே...
என்
கவிப்போர்க்களத்தின்
துரோணன் மறந்த கலையே
அகத்துப்பாலே
அதிசய வாளே
புண்ணிய உலகின்
புதிய பிறையே...
சிற்பிகள்
வடிக்க மறந்த
சிங்காரச் சிலையே...
காற்றில் மிதக்கும்
நுரைப்பந்து மதியே
உனைத் தீண்டுவதற்கு
தூண்டுதென் விதியே...
நடைபோடும்
கவிப்பிறவியே
உனை எடை போடும்
காவி போடாத
புதுத் துறவி நான்...
என் மரணம்
நிச்சயமென தெரிந்தால்
உன்
தீத்துண்டு
செவ்விதழை ரசித்துண்டு
நானிறப்பேன்...
ஏமாந்த கம்பன்
வரிசையில் நான்
உன்னை எடுத்தாளும்
கொம்பன்
உன்னை
கண்ணோக்கிய நாள் முதல்
ஒரு சந்தேகம் தான் எனக்கு...
முன்னிரவின்
வெண்ணிறப் புரவியில்
வந்தவள்தானா நீ?
இது வரையில்...
உனை தொடு மட்டும்
என் ஆசை
உன் மீதே படரட்டும்...
- முத்துமாறன்.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.