வாழிய வாழியவே!
கவி எழுதி வாழ்த்த
கற்பனையல்ல கவியே நீ!
மொழி புனைந்து பாட
மொட்டல்ல மலரே நீ!
வாய் வார்த்தையில் புகழ
வாய்ப்பாடல்ல பாடலே நீ!
தேன் அலங்காரம் புனைய
தேரல்ல கொடையே நீ!
பழகும் நல்லிதயமென தீட்ட
படைப்பல்ல பண்பே நீ!
நானிலம் நாவால் போற்ற
நாடகமல்ல நட்பே நீ!
இனிமை சொல்மழை தூவ
இலையல்ல இமயமே நீ!
ஏற்றமிகு நட்புக் கலசத்தில் தாங்க
ஏழ்பிறவியல்ல உயிர்த்தொடரே நீ!
என்றும் நலமுடன் வாழ
எழுதியல்ல மனதாகியே நீ!
தரணியில் என்றென்றும் தழைக்க
தண்டல்ல வாழையே நீ!
வாழ்வில் ஆரோக்கியப்பண் இசைக்க
வாரமல்ல பல்லாண்டு வரமே நீ!
இன்றுபோல் எந்நாளும் தயாளனாய் இயங்க
இனிப்பல்ல அமுதசுரபியாய் பிறந்தோய் வாழிய வாழியவே!
- நாகினி.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.