சாலை விதிகள் யாருக்கு?
சாலை விதிகள் யாருக்கு?
பயன்படுத்தும் நம்மவர்க்கு
நடந்து செல்லும் பொழுதினிலே
நடைபாதையை நீயும் பயன்படுத்து
சாலையோரம் குறிகள் உண்டு
பொருளே உணர்வாய் கண்டு
இடபுறமே சென்று
இடத்தை அடைதல் நன்று
நினைத்த இடத்தில் கடக்காதே
வரிக்கோட்டில் நடக்க மறக்காதே
இடது வலது நீ பார்த்து
கடப்பாய் கையைக் கோர்த்து
சைக்கிள் மிதித்து வந்தாலும்
சைகை செய்து போனாலும்
விரைந்து செல்ல நினைக்காதே
ஒலியை எழுப்ப மறக்காதே
மோட்டார் சைக்கிளில் செல்கையிலே
தலைக் கவசம் அணிந்திடுவாய்
பின்னால் வரும் வாகனத்தைப் பார்த்திடுவாய்
குறித்த நேரத்தில் குறிகாட்டியை இயக்கிடுவாய்
பேருந்து மகிழுந்தில் செல்கையிலே
நடப்போர் கடப்போர் மீதே
கவனம் வைத்து சென்றிடுவாய்
சாலை பயணம் செய்திடுவாய்
சாலை விதியை மதித்து
விபத்தை நீயும் தவிர்த்து
பாதுகாப்பாய் செல்வாய்
உன்னை பாதுகாத்துக் கொள்வாய்!
- சி. அருள் ஜோசப் ராஜ்.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.