தேடல்
கண் முன் இருக்கும் பொருளும்
சில நேரம் கண்ணுக்குத் தெரிவதில்லை
பார்வை கோளாறால் நடப்பதல்ல
பார்வையின் நோக்கம் சிதறுவதால்
ஒருமுகப் பார்வையால் தான்
என்றும் தேடல் வெற்றி பெறும்.
நாகரீகம் அதிகம் வளரவில்லை
அறிவை விரிவாக்கும் களமுமில்லை
ஆனாலும் தேடல் வெற்றி பெற்றது
ஆதி மனிதனாய் இருந்த போது
எல்லாம் இன்று இருக்கும் போதும்
தேடலில் வெற்றி தாமதமாவதேன்?
முன்னோரிடமிருந்த உழைப்பில்லை
அவர்கள் கடைபிடித்த மனிதநேயமில்லை
சாதியையும் மதத்தையும் புதைத்து
மனிதாய் வாழ்ந்த பண்பு இல்லை
இவைகளைத் தேடாமல் விட்டுவிட்டு
லாப நோக்கத்தில் தேடியதால் தானோ?
தேடும் இளைய தலைமுறையே உன்
தேடலின் நோக்கத்தை உறுதி செய்து
சுயநலம் குறைத்து பொதுநலம் சேர்
உன் தேடல் எல்லாம் வெற்றி பெறும்
வெற்றியின் பலனைப் பயன்படுத்தி
வீட்டுக்கும் நாட்டுக்கும் பெருமை சேர்ப்பாய் !
- ச. கிறிஸ்து ஞான வள்ளுவன், வேம்பார்.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.