காறி உமிழ்ந்தபடி...!
இடது கையில் சுற்றக்கொள்ளும்
அண்ட வெளியை
உதறியெறிந்துவிட்டு
என் மொழி பூரிக்கும்
ஓர் கவிதை தேடி உயிர்
விதைக்கிறேன்.
நாடுகள் பல கூடி
நாசம் செய்த என் இனத்தை
என் தேசத்iதக் கட்டும் மொழியென
அடி முடி காணமுடியா
சிலுவையில் அறையப்படா
யுகங்கள் உறங்கினாலும்
தான் உறங்காப் பேராளன் போல ஒரு
கவிதைக்காய் தவம் படைக்கிறேன்.
ஆழிப்பேரலைகள் அயர
வீறுகொண்ட இனமொன்றை
அழியும் அடங்குமென
ஒன்று கூடிய நாடுகளின்
கழிபட்ட ஆண்மையைக்
காறி உமிழ்ந்தபடி...
- கலை இலக்கியா, வீரபாண்டி, தேனி மாவட்டம்.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.