வாருங்கள் இளைஞர்களே...!
வேலை ஏதும் செய்யாமல்
வெட்டியாய் ஊரைச் சுற்றுவது
அலைபேசியில் அதிகம் பேசி
முகநூலில் மூழ்குவது...
இதுதான் இன்றைய
இளைஞர்களின் செயல்களென
இந்தச் சமூகம்
எதையாவது சொல்லிக் கொண்டுதானிருக்கும்...
தொழில் வளர்ச்சியிலும் இளைஞர்
சமூக சேவையிலும் இளைஞர்
பொது வாழ்விலும் இளைஞர்
அநீதியை எதிர்ப்பதிலும் இளைஞர்
ஆபத்துக்கு உதவுவதிலும் இளைஞர்
என்று எத்தனையோ செய்தாலும்
என்ன செய்தார்கள் இந்த இளைஞர்கள்
என்று ஏளனமாய்ப் பார்க்கும் சமூகம்
எதையாவது சொல்லிக் கொண்டுதானிருக்கும்...
குறை கூறும் கூட்டம் அது
அதையெல்லாம் கண்டு கொள்ளாதே...
அவற்றை நினைத்து வருத்தம் கொள்ளாதே...
அவர்களையெல்லாம் உதறிவிட்டு
நம்பிக்கை தரும் நல்ல பாதையில்
நடைபோட்டுச் சென்றிடுவோம்...
நாம் வெற்றியைத் தொட்டு விடுவோம்...
- ச. கிறிஸ்து ஞான வள்ளுவன், வேம்பார்.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.