வேறு பெயர் கிடைக்கவில்லை
எப்பொழுது
தூங்கினாலும்
தலையணையில்
தூங்கும் நான்
எப்பொழுது
எழுந்தாலும்
உன் மடியிலிருந்தே
உயிர்ப்பிக்கிறேன்...
*****
நீ
கன்னத்தில்
முத்தமிட...
கைகள்
கோபித்துக்
கொண்டதை
தெரியப்படுத்துகிறது
அந்த வளையல்
சத்தம்...
*****
ஹே ஹே
தள்ளி நில்
என்கிறாய்...
எப்படி நிற்க
உன் வெட்கத்தில்
மயக்கி விழும்
பூவை யார் காப்பற்றுவது...?
*****
நீ
நடந்தால்
போதும்...
சாலையோர
மரங்களெல்லாம்
காதல் சொல்ல
ஆரம்பித்து விடுகிறது
எனக்குப் பதிலாய்
அவைகள்...
*****
புதிதாய்
ஏதோ செய்கிறாய்
வெட்கத்தைத்
தவிர வேறு பெயர்
கிடைக்கவில்லை
வைப்பதற்கு.
- தமிழரசி.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.