வெறுப்பு!
விருப்பைப் போன்றே வெறுப்பும் வேண்டும்
நம் சிந்தை செயல் எல்லாவற்றிலும்
நல்லவை செய்ய விரும்பாவிட்டாலும்
அல்லவை நாளும் வெறுக்க வேண்டும்.
சாதி மதப் பிரிவினை வெறுத்திடு
ஒற்றுமையை நம்மில் வளர்த்திடும் அது
சுயநல வாழ்க்கையை முற்றிலும் வெறுத்திடு
அனைவரும் நலமாய் வாழச் செய்திடும் அது!
செய்யும் தொழிலில் நேர்மை காத்திடு
கொள்ளை லாபத்தைக் குழிதோண்டிப் புதைப்பாய்
கல்வியில் கொள்ளையை முற்றிலும் வெறுத்திடு
எளியவர்க்கும் தரமான கல்வி தந்திடுமது.
பெண்ணை அடிமையாக்கும் எண்ணம் வெறுத்திடு
ஆண்பெண் சமத்துவம் அரங்கேறும் அதனாலே
போகப் பொருளாய்ப் பெண்ணைப் பார்ப்பதை வெறுத்திடு
பாலியல் வன்கொடுமை ஒழியுமே அதனாலே.
அயல்நாட்டு மோகம் அடியோடு வெறுத்திடு
தாய்நாட்டுப் பற்று பெருகிடும் நிச்சயம்
வெறுப்பது எல்லாம் அல்லவையானால்
நல்லவராய் வாழ்ந்து ஜெயிப்பது நிச்சயம்!
- ச. கிறிஸ்து ஞான வள்ளுவன், வேம்பார்.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.