இனிமையான கிறிஸ்துமஸ்!
கடைகடையாய் ஏறி இறங்கி
கலக்கல் ஆடை எடுத்தாச்சு
புதுச் செருப்பு புது வளையல்
புத்தாடையோடு வாங்கியாச்சு
வீட்டுக்கு வண்ணமடிச்சு
வண்ணத் தோரணம் கட்டியாச்சு
கலராய் வெடிக்கும் பல வெடிகள்
வாங்கிப் பக்குவப் படுத்தியாச்சு
அருமையான கிறிஸ்துமஸ் கேக்
அதிக விலைக்கு வாங்கியாச்சு
இத்தனையும் வாங்கி இப்போ
கோவிலுக்கும் கிளம்பியாச்சு.
தாத்தாவை தனியா வீட்டில் விட்டுவிட்டு
ஆலயத்திற்கு நாங்க போனோம்
ஆலயத்தில் இருந்த இயேசு
தாத்தாவைப் பார்க்க கிளம்பிட்டாரு
ஏழைக்கு இறங்குவென
இயேசு சொன்னதை மறந்து தான்
ஆடம்பரக் கொண்டாட்டமாச்சு
பண்டிகையின் நோக்கம் மாறிப்போச்சு!
எளிமையான கிறிஸ்துமஸ்ஸே
இனிமையான கிறிஸ்துமஸ்ஸாகும்
புரிந்து கொண்டாடுவோம்
மகிழ்ச்சி கிறிஸ்துமஸாகும் உண்மையிலே...!
- ச. கிறிஸ்து ஞான வள்ளுவன், வேம்பார்.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.