பாலியல் குற்றம் குறைய...!
பார்த்த பெண்ணையெல்லாம்
அன்னையாய் கண்டது போய்
கல்லுக்குச் சேலை கட்டினாலும்
கற்பழிக்க நினைக்கும் காலம்
நாட்டிலே நடப்பதென்ன?
மதிப்பெண்ணை மனதில் வைத்து
நீதிப்பாடம் நிறுத்தப்பட்டதா?
கனினி முதல் கைபேசி வரை
ஆபாசப்படம் பார்க்கும்
வாய்ப்பு எளிமையானதா?
பாலியல் குற்றம் நடப்பதை
யாராலும் தடுக்க முடியாதென
அதிகாரத்தில் உள்ளவர்கள்
ஆதரித்துப் பேசிக் கயவர்க்கு
அடைக்கலம் கொடுப்பதுவா...?
இதைத் தடுக்க என்ன வழி?
யோசித்துப் பார்க்க வேண்டாமா?
உண்மையாய் முயன்றால்
உண்மை தெரிய வரும்
பள்ளிப் பருவத்திலேயே
பாலியல் கல்வி வழங்கிவிட்டால்
பாதகத்தின் கடுமை குறையும்
பெண் வாழ்வு பிரகாசமாகும்!
- ச. கிறிஸ்து ஞான வள்ளுவன், வேம்பார்.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.