காலமெல்லாம் காத்திருப்பேன்!
அகவிளக்கில் மலர்ந்தவளே.
அகம் முழுதும் எரிகின்றாய்
உடல்முழுதும் நீ இருக்கிறாய்
உயிரெல்லாம் நீ வருவாய்.
தித்திக்கும் உன் நினைவு!
திகட்டாத உருவமடி உன் மேனி
பட்டத்துப் பால் நிலவும்,
வெட்கித் தலை குனியும் - உன் நிறம்.
கன்னத்துக் குழியழகு கார்மேக - முடியழகு
வண்ணத்தில் நீ இருக்கிறாய்
வானழகு வடிவமடி.
எண்ணத்தில் நீ இருக்கிறாய்
ஜென்மத்தில் நீ வாழ்வாய்.
வில்லழகு நெற்றியிலே
பொட்டழகு மின்னுதடி.
வட்டமிட்ட உன்முகம்
பூ அழகு புன்னகையும் - செய்யுதடி.
ஆண்டுகள் பல கடந்ததடி
எண்ணற்ற குறுஞ்செய்தி.
கைபேசி நினைவகத்தில்.
உன் நினைவைச் சொல்லுமடி...
தினம் தினம்.
காகிதத்தில் கவி எல்லாம் நான் எழுதி
காதலர் தினம் மட்டுமில்லை...
காலமெல்லாம் காத்திருப்பேன் - சீமாட்டி!
உன் அருகில் நான் இருக்க...!
- த. ரூபன், திருகோணமலை, இலங்கை..

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.