காதலுடன் வாழ்வோம்!
இருமனம் ஏங்கித் தேடும்
இதயம் முழுதும் ஓடும்
இணையில்லா ஜீவநதி
காதல் காதல் காதல்
கனவுகளில் தினம் வாழும்
கண்களின் அசைவில் பேசும்
நிஜங்களை மறந்து வாடும் - தினம்
நிகழ்த்திடும் வர்ண ஜாலம்
காக்கா குருவியும் கூட
காதலன் காதலி ஆனால்
பட்டாம் பூச்சியாய்ப் பறந்தே
சிட்டாய்க் கானம் பாடும்
உயிரிலே கலந்து உயர்ந்திடும்
உன்னதமான உண்மைக் காதல்
உயிரையேப் பறித்து அழித்திடும்
உண்மையற்ற விபரீதக் காதல்
காதலோடு வாழ்வோம் - உண்மைக்
காதலுடன் வாழ்வோம்!
- கீத்தா பரமானந்தன்.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.