என்று தொலையுமோ...?
இந்து முசுலீம் கிறித்தவனென்று
இனபேதம் இருப்பது ஏனோ?
சொந்த அறிவின் துணையோடு
இதை எண்ணிப் பார்க்க வேண்டாமோ...?
எந்த மனிதன் எட்டு மாதம்
எந்த மனிதன் பத்து மாதம்
என்று எவரையும் காட்ட இயலுமோ...?
பத்து கைகள் கொண்டவனை
எட்டுக் கால்கள் உள்ளவனை
இங்கு காட்டத்தான் முடியுமோ...?
பெரிய மதத்துக்காரனுக்கு
இரத்தம் சிவப்பு இல்லையோ...?
சிறிய மதத்துக்காரனெல்லாம்
சோறு தின்பதில்லையோ...?
பிறக்கும் போது இல்லை இந்த மதம்
இறக்கும் போதும் இல்லை இந்த மதம்
இடையில் வந்த இந்த மதம்
என்றுதான் தொலையுமோ...?
- புலவர் ச. ந. இளங்குமரன், நாகலாபுரம், தேனி மாவட்டம்..

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.