புலவர் ச. ந. இளங்குமரன்
(தங்கள் ஒளிப்படத்தினை அனுப்பி வைக்கலாமே? - ஆசிரியர்)
தேனி மாவட்டம், நாகலாபுரத்தைச் சேர்ந்த தையற் கலைஞரான ந. பாலசுப்பிரமணி, முதுமுனைவர் இரா. இளங்குமரனார் மீது கொண்ட பற்றால் தனது பெயரை இளங்குமரன் என்று மாற்றிக் கொண்டிருக்கிறார். தமிழில் முதுகலைப்பட்டமும், புலவர் பட்டமும் பெற்றிருக்கும் இவர் கடந்த 21 ஆண்டுகளாக நாகலாபுரம் திருவள்ளுவர் மன்றத்தின் செயலாளராகப் பணியாற்றி வருகிறார். இவர் மேலும், தேனி, வையைத் தமிழ்ச் சங்கத்தின் செயலாளராகவும், குறளரசுக் கழகத்தின் மாநில நெறியாளராகவும் இருந்து வருகிறார். வையை மலர்கள், தமிழ் என் போர்வாள் ஆகிய நூல்களை எழுதியிருக்கும் இவர், தனது இலக்கியப் பணிகளுக்காக தமிழ்மாமணி, எழுத்துச் சிற்பி, குறள்நெறி பரப்புச் சாதனையாளர், தமிழ்ச்செம்மல் உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட விருதுகளைப் பெற்றிருக்கிறார்.
கட்டுரை - பொதுக்கட்டுரைகள்
கவிதை
குறுந்தகவல்

இது
முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.