மகளுக்கோர் மடல்
மகளே, சுதந்திரம் என்பது சுந்தரமானது
சுகிப்பதும் மிதிப்பதும் நீயே!
ஆடையும் அணியும் பாருக்குப் பொதுவே
ஆளுமை கொள்வதே உயர்வு
தேடலும் தெளிவும் கொண்டால்
நாடிடும் உலகம் உன்னை
வானிலும் மண்ணிலும் சுழன்று - மங்கையர்
வடிக்கிறார் காவியம் நிறைத்த
முனைப்புக் கொள் கண்ணே! நீயும்
முட்டுவாய் சிகரம் விரைந்து
தடைகள் தருவது உலகமல்ல
தயங்கும் உனது மனமே!
படைக்கும் திறமை உனக்குளுண்டு
பகைமை எதிர்த்து நீயும் வென்று
படிப்பாய் நீ புதுப்பரணி
பரவுமெங்கும் வெற்றிச் சங்கின் ஒலி
ரசிப்பேன் நானும் அருகிருந்து...
- கீத்தா பரமானந்தன்.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.