தவற விட்டுவிடாதே...!
இரை கண்ட இடம் தேடி
காகம் கூடுவது இயற்கை
பலம் கொண்ட அணி தேடி
பயணிப்பது கூட்டணி
கூட்டணி பலத்தோடு
அரசியல்வாதியின் ஆயுதமாம்
தேன் சொல்லால் பேசிடுவார்
குடிசை வீடானாலும்
குனிந்து உள்ளே வந்திடுவார்
அழுக்காய் நீ இருந்தாலும்
அரவணைத்துக் கொள்வார்
கேட்டதெல்லாம் கிடைக்கும்
மனதில் நினைத்தது கூட நடக்கும்
பணம் இல்லாதவர் என்றாலும்
பக்கம் வந்து உதவுவார்
தேர்தல் நாள் வரை மட்டுமே...
சத்தியமாய் இது சாத்தியம்
என்றென்றும் இது கிடைத்திட
நல்லவர் ஆள வேண்டும்
அல்லவர் வீழ வேண்டும்
உள்ளத்தில் உள்ளதை
ஓட்டாக வெளிப்படுத்து
உனக்கிருக்கும் ஒரே வாய்ப்பு
தேர்தல் நாள் மட்டுமே...
ஐந்தாண்டுக்கொரு முறை வரும்
வாய்ப்பைத் தவற விட்டுவிடாதே...!
- ச. கிறிஸ்து ஞான வள்ளுவன், வேம்பார்.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.