கோடையே சென்று விடு!
செல்லுமிடங்களிலெல்லாம்
தர்ப்பூசணித் துண்டுகள்
எலுமிச்சை, ஆரஞ்சு பிழிதல்
நன்னாரி வழிதலுடன்
சர்பத் தள்ளுவண்டிகள்...
சாலையோரங்களில்
கம்பங்கஞ்சி, கேழ்வரகுக் கூழ்
இளநீர், பதநீர்
நுங்குக் குவியல்கள் என்று
வயிற்றைக் குளிர வைக்கும்
விற்பனைக் கடைகள்...
வண்ண வண்ணமாய்
வெவ்வேறு ருசிகளில்
வெளிநாட்டு, உள்நாட்டுக்
குளிர்பானத் தயாரிப்புகள்...
கோடை வெயிலைக் குறைக்கும்
இவைகளால்
மணிபர்சின் எடையும்
வேகமாகக் குறைகிறது...
சுட்டெரிக்கும் கோடையே...
எங்களைக் குளிர்விக்கும்
மழைக்கு வழிவிட்டு
வேகமாகச் சென்றுவிடு!
- எஸ். மாணிக்கம், விருதுநகர்.
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.