மாறிக் கிடக்கிறது...
மழலைகள் வாழும் வீடு
நவரசம் வாசம் வீசும்
விடுமுறை நாட்களில் மட்டுமே,
பள்ளி கல்லூரி திறந்தநிலையில்
வீடுகளில் அருங்காட்சியகம் போல
அத்தனை பொருட்களும்
அசையாமல் கிடக்கிறது...
டீவியில் ரிமோட் சேனல் மாற்றாமல்
செய்த பலகாரம்
பகிர்ந்து உண்ண
பிள்ளைகள் நட்பு வராமல்,
சுவற்றில் ஸ்மைலி பொம்மை கூட
புன்னகையை மறந்தது போலும்
விளையாட பிள்ளைகள் வரும் வரை
மாடத்தில் உறங்கி கிடக்கிறது...
பொம்மைகள்...
நேசித்த அக்கம்பக்கத்தினர்
குழந்தை ஏக்கத்துடன்
வாசல் வரை
எட்டிப் பார்த்துச் செல்கிறார்கள்
வீதியில் விளையாட
தோழன் இல்லை என்று...
அம்மா தினமும்
அதிகமாக சமைத்து
மகனுக்கு தட்டு வைக்கிறாள்
அவனை விடுதியில் விட்டது
நினைவிலிருந்தும்...
- சசிகலா தனசேகரன்.
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.