அன்னையே தெய்வம்!
குழந்தையும் தெய்வமும்
குணத்தால் ஒன்றுதான்
குழந்தையைப் பெற்றெடுக்கும்
அன்னையும் தெய்வந்தான்
பிரதிபலன் பார்ப்பதில்லை
அன்னையும் தெய்வமும்.
உயிரைப் படைப்பதனால்
இறைவன் பெரியவன்
பெரியவன் வேலையை
பூமியிலே செய்வதனால்
பூமியில் தெய்வமாய்
வாழ்பவள் அன்னைதான்.
தெய்வத்தை மறந்தான்
கோவிலைக் கொள்ளையிட்டான்
அன்னையை மறந்தான்
அனாதை இல்லத்தில் கொண்டு விட்டான்
நல்லதை மறந்தால்
நஷ்டம் நமக்கே.
அன்னையை மறந்தால்
அனைத்தையும் இழப்பாய்
அன்னையைக் கண்ணாய்
அனுதினமும் போற்று
நீடித்த வாழ்வு வாழ
இதையே நீ பின்பற்று!
- ச. கிறிஸ்து ஞான வள்ளுவன், வேம்பார்.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.