எப்போது மாறுமோ?
அவன் கேட்கும் கடனோ ஆயிரங்கள்
கொடுப்பதோ அதிலும் குறைவு.
வட்டியும் ஏராளம்! அதுவும் கழுத்துக்கு
சுருக்குக் கயிறாய் நிற்கிறது!
போலியான பத்திரங்கள் கொண்டு வரும்
போலியான நிறுவனத்துக்குத் தருவதோ
கோடிக் கணக்கில் கடன்!
வட்டியும் மிகவும் குறைவு
அசலும் வட்டியும் கட்டுகின்றனர் விவசாயிகள்
அடிமட்டத் தொழிலாளர்கள்!
கோடிக் கணக்கில் கடன்பெற்ற நிறுவனங்கள்
கோர்ட்டு உத்தரவைக் கூட மதிப்பதில்லை.
தவணை கட்ட முடியாத எங்களையோ
குண்டர்களைக் கொண்டு மிஞ்சியிருக்கும்
சொத்துக்களையும் தாக்கிப் பிடுங்குகிறது வங்கி!
தேசிய வங்கிகளெலலாம் முதலில்
தொழிலாளர்களின் வளர்ச்சிக்காக திறக்கப்பட்டது!
இப்போது பெரும் முதலாளிகளிடம்
சிக்கித் திணறிக் கொண்டிருக்கிறது!
வாராக் கடன்கள் கூடிவிட்டதால்
வட்டித்தொகையும் கூடிப் போகுது!
நாட்டின் பொருளாதாரமும் நலிஞ்சு போகுது!
வரிச்சுமையெல்லாம் தொழிலாளி முதுகிலே
வரிச்சலுகையெல்லாம் முதலாளி கையிலே!
எப்போது மாறுமோ இந்தக் கொள்கை
இந்த ஏழ்மை நாட்டிலே!
- இல. பிரகாசம்.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.