இன்னும் இந்த நாட்டிலே!
செம்மண் புழுதியைப்
பகல் பொழுதில் மோலாடையாகக் கொண்டு
காக்கிக் கால் சட்டைப் பொத்தல்களை மறைத்து
கருத்த கன்னங்கள் முழுதும்
எண்ணெய் வடிய
கரட்டிலும் வயலோர வரப்பிலும்
குடிசையில் வாழ்ந்து
தம் வயதொத்த சிறுவர்களோடு
விளையாடிக் களித்து விட்டு
அரசாங்க இலவச அரிசியால்
சமைத்த உணவினை உண்டு
பள்ளித் தேர்வில் முதல்வனாய்
தேர்ச்சி பெற்றும்
மேல் படிப்பிற்கு வசதியற்று
வயிற்றுப் பிழைப்பிற்க்காகக்
குழந்தைத் தொழிலாளியாய்,
கூலியாளாய் வேளைக்குச் செல்லும்
வறுமையில் வாடும் கிராமக் குழந்தைகள்
இன்னும் இந்த நாட்டிலே...
- இல. பிரகாசம்.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.