செய்த உதவியை நினைப்போம் !
மண்ணில் வாழும் மனிதர்க்கு
என்றும் மனநிலை ஒன்றாயிருப்பதில்லை
கருணைக் கடலாய் இருந்தவரும்
காட்டுச் சிங்கமாய் மாறுவதுண்டு
வேண்டும் உதவி செய்தவரும்
வேண்டாச் செயல்கள் செய்வதுண்டு
உதவி செய்தால் உவப்பதுவும்
அல்லல் செய்தால் வெறுப்பதுவும்
நல்ல மனிதர்க்கு அழகல்ல
வளத்தைக் கொடுக்கும் ஆறுகூட
அனைத்தையும் அழித்து விடுவதுண்டு
அதற்காய் ஆற்றைப் பழிப்பதில்லை
முன்பு அவர் செய்த உதவியை
மீண்டும் மனதில் நினைத்திட்டால்
இன்று செய்த தீமையின்
கடுமை கொஞ்சம் குறைந்துவிடும்
செய்த நன்றி மறந்து விட்டால்
மனிதனும் மிருகமாய் மாறிடுவார்
செய்யும் தீமையை மன்னித்தால்
அவரே தெய்வம் ஆகிடுவார் !
- ச. கிறிஸ்து ஞான வள்ளுவன், வேம்பார்.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.