நாங்களும் மனிதர்களாய்...
வண்ணச்
சட்டையில்
ஆங்காங்கே
ஓட்டைகள்
தகரச்சட்டியில்
ஒட்டி இருந்த
ஓரிரு சோற்றுப்
பருக்கைகள்
சிலர் வார்த்தைகளால்
நேசங்கள் பரிமாற
துண்டிக்கப்பட்ட
தொப்புள் கொடியோடு
சன்னியாசம் பூண்ட
பாசக் குடும்பம்
சுவாசம் இருக்கிறது
பள்ளிவாசம்
இருக்கிறதா?
எல்லாக் கிழமைகளிலும்
சூரிய உதயமும்
அஸ்தமமுமே
நாட்காட்டி
சிலர் உணவுப்
பொட்டலத்தைக்
கொடுக்கையில்
உணர்வு பூசிய
உறவுகளை வாழ்த்தி
மனிதனாய்
விளம்பரப்படுத்திக்
கொள்ளும்
அவல நிலை
மனிதர்களாய் விலை
பேசப்படுகிறோம்
உணர்வுகளால் கொலை
செய்யப்படுகிறோம்
வாழும் வரையில்
எங்கள் வானமும்
தீக்குழம்புகளாய்...
நாங்களும் மனிதர்களாய்...
- சிவமணி.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.