தாய்க்கல்வி!
அன்பாய் அருகில் அமாந்தாள் அன்னை
ஆதிரை என்பாள் தாளில் வரைந்தாள்
“முத்தமிழ்பாழ்”என்றே;
கைகளைத் திருத்தி
மார்பில் நீ உண்ட பாலில் மாசு ஏதுமுண்டோ?
முயற் பிள்ளையிவள் நிலைகண்டு வருந்தினாள்
முத்தமிழ் பாலினை உண்ட அன்னையவள்
“முத்தமிழ்பால்” எனவெழுதுக எனத் தம் வளைக்
கையால் தளிர்க் கையினைக் கோர்த்து
ஆவியெனும் பன்னிரு உயிரையும் வரைந்தனள்
மெய்யெனும் பதினெட் டினையும் வரைந்தனள்
முத்தமிழ் மொழியினை தாய்நிலை யெய்தி!
அழகுறத் திருத்தி தம் கையால் வரைந்தனள்
ஆதிரை “முத்தமிழ்பால்” அமுது என்றே!
முத்தமிழை தம்பிள்ளைகட்கு மக்கள்
மனமுவந்திருந்து கற்பித்திடல் வேண்டும்!
- இல. பிரகாசம்.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.