மன ஊர்வலம்
காலை மணி 7
கனவுக்குச் சிறகுகள் என்பது
வடுக்களில் வலியில்
இருந்தே முளைக்கும்
காலை மணி 11
மலை உயரம் என்று
கண்கள் முடிவு செய்து விட்டால்
பாவம் பாதம் என்ன செய்யும்
மதியம் மணி 2
வாழ்க்கை சாலையில்
எதிரில் வருவது யாருமில்லை
உடன் வரும் நிழலாலே
உருவாக்கப்படுகிறது விபத்து
மாலை மணி 4
நீ எல்லாம்
அக்கா தங்கச்சியோடு
பொறக்கிலியா
கேக்கும் மனசுதான்
எக்ஸ்கியூஸ் மீ மேடம்
டைம் என்ன...
என்று கேட்கிறது
மாலை மணி 5
எழுதி வைத்த போது
அற்புதமாய்த் தெரிந்த கவிதை
இரண்டு நாள் கழித்து
படிக்கும் போது
கவிதையை கொலை செய்யலாமா
நான் தற்கொலை செய்யலாமா
கேட்கிறது
இரவு மணி 7
எல்லோரும் ஹீரோ
ஆகிவிட்டதால்
அடியாள் வேலைக்கு
ஆள் கிடைக்கவில்லை
இரவு மணி 9
பஸ் ஸ்டாண்டில்
முந்தானையை சரி செய்த
ஒருத்தியின் அழகை
மதுவில் கலந்த போது
காதல் பாட்டு கிடைத்தது...
கூடவே வாந்தியும்...
வந்தது
இரவு மணி 11
அன்பே...
உன்னைக் கிடத்தி மேல்ஏறி
உட்காரும்போது
உலகம் சிறிதாகிறது...
- அ. செந்தில்குமார், சத்திரவலசு, திருப்பூர் மாவட்டம்.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.