விஞ்ஞானத்தில் காதல்!
மனதின் பாரங்களை மையாகப் பிழிந்தெடுத்துப்
பேனாவில் சொட்டுச் சொட்டாய் ஊற்றி
வார்தைகளால் வெளிப்படுத்தி யாவரும் பெறுகின்ற
எவராலும் தரமுடியாத இன்பமன்றோ கடிதம்?
இன்று அந்தக் கடிதத்தின் நிலைமை
கவலைக் கிடமாய்ப் போனதென்னவோ?
கடிதத்தில் எழுதிய காதலன்றோ காவியமானது?
இன்று எந்தக் கடிதத்தில் காதல் இருக்கிறது?
ஊடகக் காதல் காலமாய் மாறியதேன்?
தொழில்நுட்பமே வாழ்க்கையென்று
மாறிப்போன மாயமென்னவோ?
விஞ்ஞானம் அது வீண்ஞானம் என்றாகிப்
போனதன் காரணம் என்னவோ?
விஞ்ஞானத்தின் பிடியில் காதலும்
வந்து சேர்ந்தது ஏனோ...?
- ப. செல்வகுமார், கட்டுமாவடி, மணமேல்குடி வட்டம்.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.