மழைக்காலம்!
மின்னல் வெட்டி இடியும் இடிக்குது
குளிர் காற்று வீசி மழையும் கொட்டுது
நாள் முழுவதும் அடித்த வெயிலின்
அனலும் குறையுது ஆனந்தம் நிறையுது
வறண்ட பூமியில் புல்லும் துளிர்க்குது
மனசு மகிழும் மழைக் காலத்தில்.
சாக்கடை குப்பை தூசு எல்லாம்
சுத்தமானது மழைநீர் ஓட்டத்தில்
ஓடும் பாதையில் இருந்த அடைப்பால்
குப்பை சேர்ந்தது இன்னொரு பக்கத்தில்
ஓடும் பேருந்து வீசி அடித்த
நீரால் கறையுமானது சட்டையும்.
பள்ளம் கண்ட இடங்களிலெல்லாம்
நீரும் நிறைந்தது குளமாக
தேங்கிய நீரை அகற்றக் கோரி
ஆர்ப்பாட்டம் நடக்குது ஆங்காங்கே
மழையும் நின்றது மறந்து போனோம்
மழை தந்த துன்பத்தை.
ஆண்டுதோறும் வாடிக்கையானது
குரல் எழும்பி அடங்குவது
மழை நீரை முறையாய் நாமும்
கையாள வழி காண்போம்
அடிப்படை கட்டமைப்பை மேம்படுத்தி
மழைக்காலத்தை மகிழ்வாக்குவோமே!
- ச. கிறிஸ்து ஞான வள்ளுவன், வேம்பார்.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.