மொழிபெயர்ப்பு ஏதும் உள்ளதோ...?
உலகில் உள்ள இலக்கியங்கள் யாவையும்
மொழிபெயர்த்தாலும் அவற்றில்
என்ன சாதனை?
சேயின் குழறிய ஓசைகளின் சந்தத்திற்குச்
சொல்லை வடிவமைக்கும்
மொழிபெயர்ப்பைச் செய்யும்
தாயவளுக்கு இணையாக என்ன இருக்க முடியும்?
குழறும் சொல்லுக்கிடையில்
கண்களில் மின்னும் வரிகளுக்கு
சுய மொழிபெயர்ப்பு செய்யும்
தாயவளது சாதனைக்கு ஈடாகுமோ?
கற்கண்டு சிரிப்போடு
கால்சிலம்பொலிகள் அடிபணிந்து
இசைக் கோவைகளை வடிவமைக்கும்
குழந்தையின் தாளங்களுக்கு
இசைமொழி பெயர்ப்பவர் உள்ளனரோ?
அரைஞான் மணி குலுங்கிச் சிரிக்கும் சொல்லுக்குக்
குதலை வரிசெய்யும்
மழலை மொழிக்கு
இனைமொழி உள்ளனவோ இவ்வுலகில்...?
மழலைச் சொல்லுக்குத் தேர்ந்த
மொழி உள்ளதோ...?
மொழிபெயர்ப்பு ஏதும் உள்ளதோ...?
- இல. பிரகாசம்.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.