வரிசைக்கு வாராதது ஏன்?
தேசமெங்கும் ஓர் பயணம்
தெருவெங்கும்
சாமான்யர் வரிசைகள்...
அன்றாட உழைப்பின் மிச்சம்
கொண்டாடென கேட்கும் ஆளுமை...
நல்ல பணத்தை
செல்ல வைக்கும் முயற்சியில்
நாளுக்கொரு வங்கி வதையில்
ஏழையானவர்கள்
சகித்துக் கொண்டிருக்க
சிரமமற்று பதுக்கல் பணத்தைப்
பின்வழி முறையில்
வெள்ளையாக்கியும்
தங்கமாக்கியும் வைரமாக்கியும்
போகின்றனர் ஏகபோகமானவர்கள்...
வாக்களிக்கும் உரிமை
வரிசை தந்தோர்
அவர் தம் வாழ்க்கை சோதிக்கும்
மாற்றம் முனைப்பில்
கேள்விகள் முளைத்தனவே...
கறுப்புப் பணம்
கண்டெடுத்த இடங்கள் யாது
கண்காணிப்பு வளையத்தில்
கண்டுகொள்ளப்பட்டவர் யார்? யார்?
ஓட்டளிக்க வருவதே
கடமை என்போர்
வட்டி ஈட்டுவதே
குலப்பெருமை என்போர்
தேசச்சேவையில்
வெளிப்படையானவர் என்போர்
பிறர் உழைப்பில்லாது
தொழிலில் உயர்ந்ததாக
கர்வப்படுவோர்...
வங்கி வரிசைக்கு வாராதது ஏன்?
- எஸ். மாணிக்கம், விருதுநகர்.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.