கவிதை மொழிகள்
பிரசவிக்கத் துடிக்கிறது
என் மனம்
பூனைகள் அடுப்பை அலம்புவதுபோல
ஆசைகள் எனும்
உள்ளக் கருவிலிருந்து வார்த்தைகள்
தசையாக உருவெடுக்கின்றன
உணர்ச்சிக் காட்சிகள் கண்களின் வழியே
உள்ளுருவத்திற்கு
உயிர்ப்பு ஆற்றலைக் கொடுக்கின்றன!
சிறகுப் பூக்கள் சிதறுவது போல
உயிர்மெய் எழுத்துக்கள் ஒவ்வொன்றாய்
கட்புலணாகின்றன!
மயிற் சிறகுகள் சாமரமாக அலங்காரமாவது போல
உயிர்மெய் எழுத்துக்கள்
வார்த்தைகள் வரியலங்காரமாகின்றன!
வரி வண்ணங்கள் மொழியாக, கவிதையாக,
உயிர்பெற்று உணர்ச்சி வலிகளோடு
காற்று வெளியெங்கும்
இனிய ஓசைகளோடு பிரசவிக்கின்றன!
கவிதை மொழிகள்!
- இல. பிரகாசம்.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.