வழியெதுவும் இல்லையோ!
என்றும் இந்த பூமியில்
ஏழ்மை மறைவது இல்லையே
என்னதான் செய்வது
ஏட்டில் வழியெதுவும் இல்லையோ!
எடுத்து ரைத்த நல்லோர் வழி
ஏற்பெனும் ஓருணர்வு நம்மிடம் தங்கனும்
எளிமை தவிர்த்த ஆடம்பரத்தால்
ஏழ்மை ஓரிடம் சேர்வது மங்கனும்!
எக்கணமும் தேவையில்லா பகட்டு
ஏய்த்துப் பிழைப்போர் இங்ஙனம்
எளியோரைத் தாழ்த்தி நசுக்கினால்
ஏற்றம் பெறுவது எங்ஙனம்?
எடுத்து உண்ணும் உணவினிலும்
ஏகபோகமாய் வீணாக்கும் போக்குண்டு
எதிலும் அளவாய் நிறைவுகண்டால்
ஏழ்மை மாறிடும் வாழ்வுண்டு!
- நாகினி.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.