மாறாத மாற்றமும்....
குடிமக்கள் எல்லாம்
குழப்பவாதிகளா
அல்லது குழப்புகிறார்களா?
நாளாந்தம்
நாலாயிரம் அரசியல்
நாக்கையறுத்துச்
சாகலாம் போல
நாளும் தோன்றும்
நாதியற்ற பூமியில்
நாமும்
போராடுகின்றோம்
போக்கற்ற தன்மையால்
நாளை மாறும்
நாமும் மாறுவோமென
நமக்கே நாம்
நீதி கோரி
நடைப் பிணமாக
நலிந்த மனிதனாக
நாளும் வாழ்வதும்
வாழ்வா?
நாளையது
கனவு
நேற்றையது
ஏமாற்றம்
இன்றையது நிஜம்
நில்லாத பூமி
நிற்குமென
நினைப்பதை மறந்து
நிஜமான
வாழ்வை
நிம்மதியாக்க
நிலைகொண்ட
மனிதராக
நீண்ட பூமியில்
நீயொரு
மனிதன் என்று
மட்டும்
மறக்காமல் நினைத்திடு
மாறாத மாற்றமும்
மாறும்
மாபெரும் பூமியில்.
- வாணமதி.
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.