ஆசைகள்
ஆசைகள் பேயாய் அலையுதடி
என் பேராண்மை உன்னிடத்தில் தோற்குதடி
பிரபஞ்சம் பொறாமையில் பார்க்குதடி
நீ பொழியும் புன்னகையில் வேர்க்குதடி
உன் நினைவுகளை மணியாய் கோர்த்தேனடி
மனம் மடமைகள் செய்தும் மடயனாய் ரசிக்குதடி
தனிமையெல்லாம் வலியால் நோகுதடி
காற்று என்னோடு மனம் விட்டுப் பேசுதடி
வண்டெல்லாம் என்னோடு கைகோர்த்து நடக்குதடி
நிதானமாய் வரவேண்டி என்னை கெஞ்சுதடி
நரம்பிற்க்கும் குருதிக்கும் சண்டையடி
சமாதானம் சொன்னால் வன்முறையைக் கூட்டுதடி
சங்கீதமெல்லாம் இசையாய் உன்னை ஏற்குதடி
சங்க இலக்கியங்கள் உன் பெயரை காட்டுதடி
மே மாத சாரல் என் மேல் தெறிக்குதடி
மேலும் என் விரல்கள் உனக்கான கவிதையைப் படைக்குமடி!.
- கோ. நவீன்குமார், பள்ளிகொண்டா, வேலூர் மாவட்டம்..
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.