புத்தாண்டு வேண்டும்
2016 - போதும்
அன்பைக் கொன்று வென்றது போதும்
ஆன்மிகப் போலீகளிடம் சிக்கியது போதும்
இயற்கையை அழித்துப் பட்டது போதும்
ஈவிரக்கமற்ற வாழ்க்கை வாழ்ந்தது போதும்
உண்மையைக் குழிதோண்டிப் புதைத்தது போதும்
ஊருக்கு மட்டும் உபதேசித்தது போதும்
எண்ணற்ற துரோகங்கள் செய்தது போதும்
ஏமாற்றி வென்ற வெற்றிகள் போதும்
ஐயோவென பிறரை அழ வைத்தது போதும்
ஒழுக்கத்தில் குறை வைத்தது போதும்
ஓயாது சொன்ன பொய்கள் போதும்!
2017 - வேண்டும்
அன்பை அள்ளிக் கொடுத்து வாழ்ந்திட வேண்டும்
ஆன்மிகத்தில் இறைமொழி கேட்டு வாழ்ந்திட வேண்டும்
இயற்கையைப் போற்றி இன்பம் காண வாழ்ந்திட வேண்டும்
ஈகையால் மகிழ்ந்து நாளும் வாழ்ந்திட வேண்டும்
உண்மையை உயிராய் மதித்து வாழ்ந்திட வேண்டும்
ஊருக்கு உழைத்துப் பிறர் போற்ற வாழ்ந்திட வேண்டும்
எண்ணத்தில் எள்ளளவும் துரோகமின்றி வாழ்ந்திட வேண்டும்
ஏற்றம் பெற எல்லா முயற்சிகளும் செய்த் வாழ்ந்திட வேண்டும்
ஐயன் வள்ளுவன் வழியில் வாழ்ந்திட வேண்டும்
ஒழுக்கத்தை உயிராய்ப் போற்றி வாழ்ந்திட வேண்டும்
ஓங்கும் புகழை இதனால் பெற்று மகிழ்ந்திட வேண்டும் !
- ச. கிறிஸ்து ஞான வள்ளுவன், வேம்பார்.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.