மனித ஓட்டம்!
மானுட சமூகம் ஒன்றிணைந்த
கூட்டமைப்பு உலகம்!
நிறத்தாலும் குணத்தாலும்
மனிதன் வேறுபடுகிறான்
நிஜங்களைத் தொலைத்துவிட்டு
நிம்மதி தேடி அலைகிறான்...
சாதி, சமய சழக்குகளுக்குள்
சுயேட்சைத் தேடி
மக்களின் உடைமைகளை
உருக்குலைத்து தன் ஓட்டை
அங்கே பதிவு செய்கிறான்...
அகிம்சை வழியில்
சுதந்திரம் தேடிய
காந்தியும்
பாரத மக்களின்
விடுதலைக்காகச் செக்கிழுத்த
வா.உ. சியுமென
போராளிகளின் எண்ணிக்கை
பட்டியலிடப்பட்டாலும்
இன்று
உலகப் பணக்காரர்களின்
பட்டியலில் முதலிடம் பெற
பந்தயக்களத்தில் பங்குதாரராய் ஆக
உலகின் கடைகோடி மனிதன் வரை
ஓடிக்கொண்டேயிருக்கிறான்...!
- முனைவர் ப. மீனாட்சி, சிவகாசி

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.