நம்பிக்கையே வலிமை!
வம்புகள் வளர்த்திடுமோர்
சம்பவம் தவிர்க்கின்ற
தெம்பினைக் கடைபிடிக்க
நம்பினார் கெடுவதில்லை!
அம்பெனும் சொற்களினால்
வம்பினை மூட்டிவிட்டால்
வெம்பிடும் வாழ்வென்று
நம்பினார் கெடுவதில்லை
அம்பலம் ஏற்றிவிடும்
வம்பினால் என்றைக்குமே
நிம்மதி இழப்பமென
நம்பினார் கெடுவதில்லை!
இடுக்கண் வம்பழிக்க
எடுக்கின்ற முயற்சிகளை
உடுப்பென நம்பினவர்
கெடுவதில்லை சத்தியம்!
அடுக்கடுக் காய்த்தீச்சொல்
தொடுப்போரை முறியடிக்கும்
தடுப்புகள் நம்பினவர்
கெடுவதில்லை பத்தியம்!
கடுகடுத்த வம்புகளைக்
கொடுத்திடும் பகையோரைத்
தடுத்திட நம்பினவர்
கெடுவதில்லை நித்தியம்!
- நாகினி, துபாய்.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.