வேல்விழி
தொடரியின்
தொடர்வேகம் போல
விழிகளின் பயணம்.
விழிகள் விளித்தலில்
வழி(லி)யறியாமல்
காதலில்
தொடர்கதையாய்...
ஒவ்வொரு நிமிடப்
பயணத்தில்
மாமலையின் சிகரமான
நெஞ்சாங் கூட்டில்
வேல்விழிகளின்
கணைகள்...
அடைமழையாய்
துளைத்தன.
விழிகள் துளைத்தக்
காயத்திற்கு
விண்மீன்கள் போல
வலம் வருவாளா...?
நஞ்சாகி
நொருங்கிப் போன
நெஞ்சாங் கூட்டிற்கு
நிலவாய் நிற்பாளோ...?
எட்டுத்திசைகளிலும்
எட்டிப்பார்க்கும்
சூரியனாய்ச் சுழல்வாளோ...?
வாழ்க்கைக்கு
வானவில் போல்
பகலிரவிலும்
பதியாய் தவமிருப்பாளோ...?
நெஞ்சத்தின் பிறழ்வுக்கு
அவள்
உயிரில் கலந்த
என் சுவாசக்காற்றே...
முற்றுப்புள்ளி.
- சி. இரகு.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.