மகிழ்ச்சி

கல்லூரி
சிற்றுண்டியில்
அமைதியாக
தேனீர்
பருகிக் கொண்டிருந்தோம்.
ஏனோ?
தெரியவில்லை
மனம்
அவள் வருவாளா?
ஒரு புறம்
ஏங்கிக் கொண்டிருந்தது.
மற்றொரு புறம்
வர மாட்டாள்
எதிர்மறையாக
வினவியது.
மனம்
நினைத்து முடிப்பதற்குள்,
அவளும் அவள்
தோழியும்...
மெல்லிய சாயலோடு
எதிரேயிருந்த இருக்கையில்
எதிரெதிரே
அமர்ந்தார்கள்.
என்னெதிரே
அமர்ந்திருந்த
அவள்
தோழியிடம் உரையாடினாள்.
அவள்
விழிக்கற்றைகளால்
என்னை
வீழ்த்தினாள்.
வீழ்த்தியது
எதற்காகத் தெரியவில்லை.
பலமுறை
அவள் விழிக்கற்றைகளை
விழுங்கினேன்.
பல மாதங்களாக...
அவளை
மௌனத்தில் கண்டேன்.
அந்த
மௌனம்
சிற்றுண்டியில்
களைந்தது.
மௌன முகத்தில்
மெல்லிய மொட்டுகள்
மெட்டுக்களாய்
அலங்கரித்தன.
அவள்
அவளை அறியாமல்
மல்லிகை மலரின்
புன்னகைப் போல்
தொடர்ந்து உரையாடினாள்.
எதிரே அமர்திருந்த
நான்
அவளை
மனதிற்குள்
பிம்பமாக்கினேன்.
உரையாடியது
என்ன என்பது
தெரியாது.
ஆனால்...
அந்த சப்தம்
செவிகளில்
அமுதமாய் பாய்ந்தது.
உலகத்தையே
ஒருங்கிணைக்கின்ற
கைபேசியை
வருடிக்கொண்டு
அவளை நோக்கிக்
கொண்டேயிருந்தேன்.
யான் நோக்குவதை
அறிந்த அவளின்
முகத்தில்...
பல்லாயிரம் வருடம்
தவமிருந்து பெற்ற
குழந்தையைக் கண்ட
தம்பதியர்களின்
மகிழ்ச்சியையும் வென்றது
அவளின் புன்னகை.
முகவரி
தவறிய எனக்கு
முகவரி கொடுத்தது
அவளின் புன்னகை
மகிழ்ச்சி.
இறைவன்
படைத்த படைப்புகளில்
அவள்
பிரம்மன் வியக்கும்
அதிசயம்.
நேருக்கு நேர்கண்ட
அத்தருணம்
வாழ்க்கையின்
சொரூபம்.
அவளைக்
கண்டு கொண்டிருந்த
அந்த
இருபது மணித்துளிகளில்...
அறிவியலின்
கண்டுபிடிப்புக்களையும்
தகர்த்துப்
பூவுலகை விட்டு
ஈரேழு உலகையும்
நொடிப்பொழுதில்
மனம்
உலாவிச் சென்றது.
அந்த நிமிடங்கள்
வாழ்க்கை வரலாற்றின்
பொற்சுவடுகளில்
பொறிக்கப்பட்டத் தருணம்.
- சி. இரகு.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.