மருதாணிப் புன்னகை!
மாலைத் தென்றலின் மங்கை
மருதாணிப் புன்னகையை
தீயென எண்ணி
வானவீதியில் அள்ளித் தெளிக்கிறாள்
செந்தீ மங்ககையவளைச் சுட்டதோ?
சுகம்தர மறுத்ததோ?
தென்றலின் தீண்டலில்
அவள் தேகம்
நாணத்தால் சிவத்ததோ?
புன்னகைத் தீயினில்
இளங்காதலர் ஒருவர் ஊடலில்
சுகம் பெறவும்
மற்றொருவர் கூடலில் முயங்கவும்
கண்டு நாணிச் சிவத்ததோ?
விரைவினில் நமைவிட்டு
தென்றல் காதலன்
நீங்கும் நிலை கண்டு
அவள் தேகம் சிவத்ததோ?
மேகமீதனில் மிதந்து வரும்
வெள்ளி மீனினை- வான்வீதியில்
தென்றலோடு காதல் கொண்டமைக்கு
சாட்சியாக வரம் கேட்டுச் சென்றதோ...?
- இல. பிரகாசம்.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.