சரித்திரம் சொல்லும்!
பாரதி கண்ட புதுமைப் பெண்ணாய்
பட்டங்கள் ஆண்டு சட்டங்கள் செய்தாய்
எட்டாவது வள்ளல் காட்டிய வழியில்
எட்டாத புகழைப் பாரினில் பெற்றாய்
வெட்டு ஒன்று துண்டு இரண்டென்பார்
நீ எடுத்த முடிவும் அப்படியே.
கொள்கைப் பரப்புச் செயலாளர் முதல் பதவி
கொள்கை கொண்டாய் முதல்வர் பதவியால்
அதிமுகவின் பொதுச் செயலாளராய்
அண்ணாந்து பார்க்கும் வெற்றி தேர்தலில்
ஒன்றரைக் கோடி தொண்டர் கட்சியில்
தமிழகமே உன் அன்பின் பிடியில்.
உன்னைப் பிடிக்காதவர்கள் கூட
உன் தன்னம்பிக்கையையும் தைரியத்தையும்
தயங்காமல் பாராட்டுவார் பொதுவெளியில்
உம் கொள்கையில் பல உடன்பாடில்லையென
ஓங்கி உரைப்பவர் கூட உடன்படுவார்
நீ கொண்டு வந்த இடஒதுக்கீட்டுக் கொள்கையில்.
மறைவில் கூட சொல்லிச் சென்றாய்
இருந்தாலும் மறைந்தாலும் உன்போல்
பேர் சொல்ல வாழ வேண்டுமென்று
வங்கக் கடலோரம் உறங்கும் தங்கமே
சிங்கமென நீ வாழ்ந்த வாழ்க்கை
காலம் கடந்தும் சரித்திரம் சொல்லும் !
- ச. கிறிஸ்து ஞான வள்ளுவன், வேம்பார்.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.