இயற்கையே... தேவை!
இறைவன் படைத்த
அற்புத படைப்பில்
இன்பமும்
யதார்த்தமும்
சுற்றுச் சூழலும்
கை கோர்த்தது
ஆயிரம் வலிகளை
சுமக்கும் இதயம்
சுகப்படுவதும்
ஆன்மா அமைதி அடைவதும்
வடிகாலாய் வசந்தகீதம்
பாடுவதும் இயற்கையே...
யுகம் பல சென்றாலும்
ஆரோக்கிய வாழ்வை
அள்ளித் தருவதும் இயற்கையே...
சிந்திக்கும் திறனற்ற
மனிதனது வாழ்வியல் களஞ்சியம்
ஆறறிவு பெற்ற மனிதனோ
சுற்றுச் சூழலின் விசக்கிருமி
சுயம் தேடும் மனிதனே - நீ
ஒரு முறை சிந்தித்துப்பார் - உன்
வீட்டு வாசலில்
எத்தனை மோட்டார்களென்று...!
- முனைவர் ப. மீனாட்சி, சிவகாசி
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.