நல்லதைத் தேக்கு!
அன்பைத் தேக்கினால்
இன்பமாய் வாழலாம்
ஆர்வத்தை தேக்கினால்
புதியன கிடைத்திடும்
நட்பைத் தேக்கினால்
நல்லவர் கூடுவார்
நன்றியைத் தேக்கினால்
நிலைக்குமே உன் பெயர்.
ரசனையைத் தேக்கினால்
உலகையே ரசிக்கலாம்
சிரிப்பைத் தேக்கினால்
பிடிக்குமே உன் முகம்
வீரத்தைத் தேக்கினால்
வெற்றி உனக்குத் தான்
விவேகத்தைத் தேக்கினால்
அகிலமே உனக்குத் தான்.
கோபத்தைத் தேக்கினால்
அழிவு உனக்குத் தான்
சோம்பலைத் தேக்கினால்
வெற்றியை இழப்பாயே
துரோகத்தைத் தேக்கினால்
நரகம் அருகிலே
பொறாமையைத் தேக்கினால்
அடையமாட்டாய் இலக்கையே.
தேக்கம் நல்லது தான்
நோக்கம் நல்லதானால்
அதுவே உன்னைத் தாக்கும்
நோக்கம் கெட்டதானால்
தெளிந்த நீரோடையாய்
மனதை வைத்து விட்டால்
நீர்த்தேக்கமாய் பயன்படுவாய்
அகிலத்தில் அனைவருக்கும்!
- ச. கிறிஸ்து ஞான வள்ளுவன், வேம்பார்.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.