எழுத்தாளர்களின் சிநேகிதர்
அயலாரையும் வசீகரித்த
இக்காலத் தமிழின் அசோகமித்திரனே!
இனிய தமிழேந்தலே!
இலக்கியச் சுவட்டில்
எழுத்துச் சூரியனாய்
ஒளிரும் புனைகதைச் சூரியனே!
ஒரு மொழியல்லாது
இருமொழி வாய்ந்த
இலக்கிய இளவலே!
உன் கரைந்த நிழலில்
திரைநிழலின் மறுபக்கத்தைக் காட்டினாய்!
வாழ்க்கையின் நெடிய
பயணத்தைத் தொடங்கி
இலக்கியத்தை வடித்த
இலக்கியச் சிற்பியே!
உம் அப்பாவின் சிநேகிதரைச்
சிநேகித்தோர் அநேகம் பேர்
உம் எழுத்துக்களைச் சிநேகித்தோர்
உம்மையும் சிநேகித்தனர்
நீ இலக்கியத்தின்
சிநேகிதர் மட்டுமல்ல!
என்றும் எழுத்தாளர்களின் சிநேகிதர்
உம் சிநேகிதர்கள் இருக்கும் வரை
உம் எழுத்துக்கள் நிலைத்திருக்கும் – அவை
என்றும் இதயத்தில் நிறைந்திருக்கும்!
- முனைவர் சி.சேதுராமன், புதுக்கோட்டை.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.