வெளியே வாடா!
மனிதனே! மனிதனே!
வெளியே வாடா!
மனச்சிறையை உடைத்து நீ
வெளியே வாடா!
விழிகள் திறந்து பாரடா
விரிந்து கிடக்கு பாரடா
தோல்வி இருக்கு வாடா
துன்பம் இருக்கு வாடா
தோல்வி துரத்தி
துன்பம் விரட்டி
வாகை சூடி நீ வாழடா!
*****
மனிதனே! மனிதனே!
வெளியே வாடா!
மனச்சிறை உடைத்து நீ
வெளியே வாடா!
தோல்வியா அது சொத்துடா
அனுபவம் சொல்லும்!
வலிகளும் ஒரு சுகமடா
வாழ்வும் சொல்லும்!
இந்த வாழ்க்கையே
ஒரு கவிதை தான்
நீ ரசித்தால் மட்டும்...!
*****
மனிதனே! மனிதனே!
வெளியே வாடா!
மனச்சிறை உடைத்து நீ
வெளியே வாடா!
அழுகை அடக்கு உரமாகும்
அமைதி உனக்கு வரமாகும்
ஆறுதல் எதற்கு நடைபோடு
ஆசை இருக்கட்டும் அளவோடு
உன் உழைப்பிலே
உயர்வாய் நீயும்...
இந்த உலகிலே
ஒளிர்வாய் நீயும்...!
- கதிர்மாயா கண்ணன், பொட்டல், அம்பை வட்டம்..

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.