கல்விக்கண்கள் திறக்கட்டும்!
கல்வியே நல்வழிகாட்டி உணர்வாயே
கருத்துடன் வாழ்வில் உயர்ந்திட
கடமைகள் தவறாமல் ஆற்றிட
கண்போன்ற எழுத்தறிவைப் பெறுவாயே!
கயமை வஞ்சனை நெருங்காமல்
கல்லாமை பாதையை மாற்றியே
கற்றுணர விருப்பம் கொண்டாலே
கலக்கம் ஒருநாளும் அண்டாது!
கடைத்தெருவில் விற்கும் பொருளாக
கல்வியைக் கூவிப் புகட்டிடும்
கருத்துத் திணிப்பு வேண்டாமினி
கம்பீரமாய் முன்வந்து கற்பாயே!
கணக்குப் போட்டு வாழ்கின்ற
கடின உழைப்பும் உயர்வாகிடும்
கனவும் மெய்ப்பட வேண்டுமெனில்
கல்விக் கண்கள் திறக்கட்டும்!
கற்பனை வாழ்வே சுகமென்று
கல்லாய் மரமாய் நில்லாமல்
கற்று நன்றாய் பகுத்துணரும்
கலையாத மனிதம் காப்பாயே!
- நாகினி, துபாய்.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.