நில்...! கவனி...! செல்...!
நில்...!
உழைப்பு உழைப்பு உழைப்பு
காலை மாலை இரவென
இடைவிடாது வெற்றியை நோக்கி
ஓடும் மனிதா கொஞ்சம் நில்
நிற்கும் சில நிமிடங்களையாவது
குடும்பத்தோடு செலவு செய்.
கவனி...!
ஓடிக் கொண்டே இருக்கும் மனிதா!
ஓரமாய் நின்று கொஞ்சம் நீ கவனி
மனைவியை மகிழ்ச்சிப் படுத்தினாயா?
பிள்ளைகளுடன் பிரியமாய் இருந்தாயா?
பணம் மட்டுமே பயணத்தின் இலக்கானால்
நீ நிறையவே இழக்க வேண்டும்.
செல்...!
குடும்பத்தோடு குதூகலமாயிரு
சமூகத்தோடு சுமுகமாய்ப் பழகு
இயன்றதைச் செய் இயலாதவர்க்கு
இத்தனையும் செய்து செல்
அத்தனை பேர் ஆசியும் உனக்குண்டு
நிச்சயம் வெற்றி நாயகன் நீ தான்.
- ச. கிறிஸ்து ஞான வள்ளுவன், வேம்பார்.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.